இலங்கை: கண்ணிவெடியில் சிக்கி 5 பேர் பலி
கொழும்பு:
இலங்கை, மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியில் உள்ள உரவூரில் உள்ள பள்ளியில் விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 3 போலீஸ்காரர்கள்உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை காலை நடந்தது. ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், உரவூர் பகுதியிலுள்ள கலைமகாவித்யாலயாபள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் சரியாக 9 மணிக்கு இந்த இந்த்க கண்ணி வெடித்தாக்குதல் சம்பவம் நடந்தது.
இச் சம்பவத்தில் பள்ளியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 3 போலீஸ்காரர்கள் உடல் சிதறி இறந்தனர். அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்த கணவன்,மனைவி இருவரும் இந்தச் சம்பவத்தில் இறந்தனர். இதில் இரண்டு போலீஸ்காரர்கள் மற்றும் ஒருவர் காயமடைந்தனர். அவர்களுக்குமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை முழுவதும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடந்து வருகிறது. பொதுத்தேர்வு நடக்கும் பள்ளியைக் குறி வைத்து புலிகள் தாக்குதல் நடத்துவதுஇதுவே முதல் முறையாகும் என்றார்.
2 புலிகள் பலி:
இதற்கிடையே நுணவில்லில் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு புலிகள் உயிரிழந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications