கோபாலை விசாரிக்க பெங்களூர் கோர்ட் உத்தரவு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட விவகாரத்தில் நக்கீரன் கோபால் பங்கு பற்றி போலீஸ் விசாரணை செய்யவேண்டுமென பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தபபட்டு 108 நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். ராஜ்குமாரை விடுவிக்கஅரசு தூதராக நக்கீரன் கோபால் செயல்பட்டார்.
தற்போது பெங்களூரைச் சேர்ந்த வயிற்றுக் கட்சி ராமசாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை ஏறறுக்கொண்ட நீதிமன்றம்,ராஜ்குமார் மீட்கப்பட்ட விவகாரத்தில் கோபாலின் பஙகு பற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
ரங்கசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்ராஜ்குமாரை மீட்க நக்கீரன் கோபால் 5 முறை காட்டுக்கு சென்று வந்தார். அப்போதுஅங்கிருந்த தேசவிரோத சக்திகளுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அவர்களுடன் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவத்தில் கோடிக்கணக்கான பண பேரம் நடந்துள்ளதாக தெரிகிறது. நாகப்பா வீரப்பனிடமிருந்து காட்டிலிருந்து தப்பிவந்தார். கோவிந்தராஜ் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார் என கூறப்பட்டது. ஆனால் உண்மை என்ன என்பதுதெரியவில்லை. இதில் நடந்த உண்மைகள் என்ன என்பது தெரிய உத்தரவிட வேண்டும். இதற்கான விசாரணைக்குஉத்தரவிடவேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், மருமகன் கோவிந்தராஜ் ஆகியோரிடமும்விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
மனுவை ஏற்று மாஜிஸ்திரேட்டு பட்டீல் விசாரணை செய்ய உத்தரவிட்டார். நக்கீரன் கோபால் மற்றும் 3 பேர் மீதுள்ள புகாரைசதாசிவ நகர் போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்ய வேண்டும். விசாரணை அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications