For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புஷ் வெற்றி: மகிழ்ச்சியில் இங்கிலாந்து கிராமம்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

George Bush with his Wifeஜார்ஜ் புஷ்,அடுத்த அதிபராகப் போகும் நிலையில் இங்கிலாந்திலுள்ள ஒருகுக்கிராமம், அதிகபட்ச மகிழ்ச்சியில் ஆழந்துள்ளது.

ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபராவதில், இங்கிலாந்து கிராமத்திற்கு என்ன மகிழ்ச்சிஇருக்க முடியும் என்ற கேள்வி எழுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், ஜார்ஜ்புஷ்ஷின் மூதாதையர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த மகிழ்ச்சியில்நியாயமே உள்ளது.

இங்கிலாந்தின் எஸ்ஸக்ஸ் கவுண்டியில், உள்ளது மெஸ்ஸிங் என்ற குக்கிராமம். இங்குமொத்தமே 250 பேர்தான் வசிக்கின்றனர். புஷ்ஷின் மூதாதையர் இந்த கிராமத்தைச்சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த ரெனால்ட் புஷ் என்பவர் 1631ம் ஆண்டுவாக்கில் இங்கிருந்து குடிபெயர்ந்து, இப்போதைய இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்தார்.

மெஸ்ஸிங் கிராமத்தின் வரலாறு குறித்து புத்தகம் எழுதியுள்ள ரோஜர் கார்டர் என்பவர்கூறுகையில், ரெனால்ட் புஷ்ஷின் குடும்பத்தினர் அடிப்படையில் விவசாயிகள்.1300-ம் ஆண்டு முதல் இவர்களது வரலாறு துவங்குகிறது. 1631-ம் ஆண்டில்இங்கிருந்து இடம் பெயர்ந்து, நவீன இங்கிலாந்தில் குடியேறினர்.

மெஸ்ஸிங் குறித்தும், புஷ் குடும்ப பாரம்பரியம் குறித்தும் புதிய அதிபருக்கு நாங்கள்எழுதுவோம். எங்களை வந்து பார்க்குமாறும் அழைப்பு விடுப்போம் என்றார்கார்ட்டர்.

மெஸ்ஸிங் கிராமத்திலுள்ள டோனி கியோக் என்பவரின் மது பாருக்கு, ஜார்ஜ் புஷ்ஜூனியரின் தந்தை ஜார்ஜ் புஷ்ஷின் பெயர் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1988முதல் 92 வரை ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் புஷ் தனக்கு அனுப்பிய நன்றிக் கடிதம் மற்றும் அமெரிக்க தேசியக் கொடிஆகியவற்றை பத்திரமாக பாதுகாத்து வருகிறார் கியோக்.

புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள புஷ்ஷின் மகனும், மெஸ்ஸிங் கிராமத்துடனானதனது பாரம்பரியத் தொடர்பை பாதுகாப்பார் என்று கியோக் நம்பிக்கைதெரிவிக்கிறார். புஷ் மனதில் எஸ்ஸக்ஸிற்கு எப்போதுமே தனியிடம் உண்டு என்கிறார்அவர்.

புஷ் வெற்றியை பலவிதமாக கொண்டாடுகிறார்கள் மெஸ்ஸிங் மக்கள். சிலர், அல்கோரின் உருவபொம்மையை எரிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதிபராக ஜார்ஜ் புஷ்பதவியேற்கும் நாளில் அவ்வாறு செய்ய அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஜார்ஜ் புஷ் குடும்ப பின்னணி குறித்து செய்தி வெளியாவது இது முதல் முறையல்ல.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஹியூக் பெஸ்கெட் என்ற வரலாற்றியல் ஆசிரியர் புஷ்குடும்பம் குறித்து முதலில் தகவல் வெளியிட்டார். ஆனால் இந்த கண்டுபிடிப்பை புஷ்குடும்பம் விரும்பவில்லை. தங்களை முழுமையான அமெரிக்கர்களாகவே காட்டிக்கொள்ள புஷ் குடும்பம் விரும்பியதே இதற்குக் காரணம்.

பெஸ்கெட் கூறுகையில், தாங்கள் இடம் பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுவதை புஷ்குடும்பம் விரும்பவில்லை. அதனால் எனது கண்டுபிடிப்பை அவர்கள்ஆதரிக்கவில்லை என்றார் அவர்.

இதற்கிடையே, ஜார்ஜ் புஷ் ஜூனியரின் தந்தை புஷ், அதிபராக இருந்த போது,மெஸ்ஸிங் கிராமத்து மக்கள் அவரை தங்களது கிராமத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்திருந்தனர். இதையடுத்து அமெரிக்க புலனாய்ப் பிரிவான, சி.ஐ.ஏ., மெஸ்ஸிங்கிராமத்தில் உளவு பார்த்தது. இதுகுறித்து பின்னர் அறிந்து கொண்ட புஷ், கிராமத்துமக்களிடம் மன்னிப்பு தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X