குருப்பெயர்ச்சி 2026: ரிஷப ராசிக்கு லக்கி ஜாக்பாட்.. பணவரவு சூப்பர்.. 3 சூப்பர் சம்பவம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

guru-peyarchi-2026-powerful-guru-peyarchi-benefits-for-rishabam-rasi

குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு ரிஷப ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு 8, 11 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான் தற்போது 3 ஆம் இடத்துக்கு வருகிறார். குரு பார்வையால் ரிஷப ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பிரிந்தவர்கள் ஒன்று சேரக்கூடிய யோகம் உண்டாகும். துணை விஷயத்தில் அனுகூலம் காணப்படும். துணைக்கு இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் போன்ற நிலைமைகள் மாறி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

நல்ல லாபம்

நீதிமன்றம், வழக்கறிஞர் வரை சென்றவர்கள் கூட மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்று சென்று விடுவீர்கள். குடும்பம் அற்புதமாக இருக்கும். பெற்றோர், பெரியோருக்கு உங்களால் புகழ், கெளரவம், மதிப்பு, மரியாதை ஏற்படும். நல்ல லாபங்கள் கிடைக்கும். எதிர்பார்க்காத நல்லது நடக்கும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் யோகத்தைத் தரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும்.

சிக்கல் தீரும்

யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். தொழில் மிக அற்புதமாக இருக்கும். லாபங்கள் அபரிமிதமானதாக கிடைக்கும். எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் நடக்கும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தொழில், உத்தியோகம், நல்ல வியாபாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணவரவு கிடைக்கும்.

புரோமோஷன்

சம்பள உயர்வு, பதவி உயர்வு, ஜாக்பாட், லாட்டரி கிடைக்கும் யோகம் உண்டாகும். அரசியலில் பெரிய ஏற்றம் உங்களுக்கு ஏற்படும். 11 இல் சனி இருப்பதால் ஆச்சரியமான நன்மைகள் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து முடிப்பீர்கள். நிறைய நன்மைகள் நடக்கும் குரு பார்வை இருப்பதால். உடனிருப்பவர்கள் விஷயத்தில் கவனம் தேவை. அதனால் உங்களுக்கு நிறைய சஞ்சலங்கள் ஏற்படும்.

வழிபாடு

அற்புதமான யோகங்களைத் தரக்கூடிய காலகட்டம் என்பதால் இதனைப் பயன்படுத்திக் கொளவது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். சிங்கர்குடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 3 நரசிம்மர் கோயில்களுக்குச் சென்று வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+