கால்நடைத்துறை ஊழல்: நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கால்நடைத்துறையில் மருந்துகள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார்பற்றி விசாரித்து மார்ச்மாதம் 14-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனலஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு முதன்மை செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.
கால்நடைத்துறைக்கு மருந்து வாங்கியதில் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்திமுறைகேடுகளில் ஈடுபட்டதாக கால்நடைத்துறை அமைச்சர் புலவர் செங்குட்டுவன்,கால்நடைத்துறையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் லீலாவதி ஆகியோர் மீது ராசிபுரம்தொகுதி எம்.எல்.ஏ. சுந்தரம் சென்ற மாதம் 21-ம் தேதி சென்னை செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார.
புலவர் செங்குட்டுவனும், டாக்டர் லீலாவதியும் செய்த மோசடியால் அரசுக்கு ரூ 8கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தன் மனுவில் குறிப்பிட்டருந்தார்.
இந்த மனுவை ஏற்று விசாரித்த சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார்இது போல் புகார் எதுவும் விசாரணையில் இருக்கிறதா என கேட்டு லஞ்ச ஒழிப்புபோலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சன்ற ஜூலை மாதம் 27-ம் தேதி தமிழகஅரசு கொடுத்த உத்தரவின் படி சென்ற ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி அன்றைய இயக்குனர்லீலாவதி உள்ளிட்ட சிலர் மீது விசாரணை செய்தோம்
அதில் அவர்கள் ஊழியர் இடம் மாற்றம் மற்றும் நியமனத்திற்காக பணம்வாங்குவதாகவும், கால்நடைக்கு மருந்து வாங்குவதில் முறைகேடுகள் செய்வதாகவும்புகார்கள் வந்தது.
இதைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருகிறது. மனுதாரர் சுந்தரம்அளித்த புகாரிலும் இதே குற்றச்சாட்டுதான் இருக்கிறது. அவர் கொடுத்த புகாரின்நகலைை நாங்கள் பெற்றுள்ளோம் என கூறியிருந்தனர்.
சுந்தரம் சார்பாக வாதாடிய வக்கீல் மனோஜ் பாண்டியன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் பல உத்தரவுகளை உதாரணம் காட்டி குற்றம் சாட்டப்பட்டவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என வாதாடினார்.
விசேஷ அரசு வக்கீல் நீதிமன்றதில் ஆஜாராகி கூறுகையில், 3 ஆண்டுகளாக நடந்ததாககூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணை முடிய மேலும் 3 மாதங்கள் ஆகும்.
விசாரணையில் முறைகேடு நடந்திருப்பதாகவோ அல்லது குற்றம் செய்ததோகண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதுவழக்குப் பதிவு செய்யப்படும் என கூறினார்.
ஆரம்பகட்ட விசாரணையை முடித்து மார்ச் மாதம் 14-ம் தேதி விசாரணைஅறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புபோலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications