வெளிநாட்டு தலையீடு தேவையில்லை .. இலங்கை பிரதமர்
கொழும்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள்விரும்பவில்லை என்று இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ கூறியுள்ளார்.
தலைநகர் கொழும்பில் ஒரு கருத்தரங்கில் பேசுகையில் அவர் கூறியதாவது:
இலங்கையின் எந்தப் பிரச்சினையிலும் வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள்விரும்பவில்லை. இது எங்களுடைய பிரச்சினை. நாங்கள்தான் இதைத் தீர்க்கவேண்டும், பிறகுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை.
இலங்கையின் பிரச்சினை குறித்து பிற நாடுகள் கவலை தெரிவித்தால், நல்லெண்ணஅடிப்படையில் அதை நாங்கள் வரவேற்கிறோம். அதேசயம், எங்களது நண்பராகவேஇருந்தாலும் கூட, தலையீட்டை எதிர்க்கிறோம்.
எங்களது பிரச்சினைக்கு நாங்களே தீர்வு காண வேண்டும். அதைத் தான் நாங்கள்விரும்புகிறோம். இதுவே இலங்கை அரசின் தீர்மானமான கொள்கையும் கூட.
விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடந்தாலும் கூட போர் நிறுத்தம் செய்வதில்லைஎன்பதே அரசின் கருத்து. இது எங்களது நிபந்தனையும் கூட.
இதற்கு முன்பு விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு பின்னர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த அனுபவத்தை நாங்கள்மறக்கவில்லை. எனவேதான் பேச்சுவார்த்தை நடந்தாலும் கூட, சண்டை நிறுத்தம்அறிவிக்க முடியாது என்று கூறுகிறோம்.
இப்போது தங்களது பலம் குறைந்து விட்டது என்ற காரணத்தால், அமைதிப் பேச்சுக்குத்தயார் என்று புலிகள் கூறுகின்றனர். அதை நம்பி ஏமாற நாங்கள் தயார் இல்லை என்றார்ரத்னஸ்ரீ.
சில நாட்களுக்கு முன்பு இலங்கை வந்திருந்த இங்கிலாந்து வெளியுறவுத் துறைஅமைச்சர் பீட்டர் ஹெயின், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களைத்தெரிவித்திருந்தார். அதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும், ஹெயின் கருத்துக்கு எதிர்ப்புதெரிவித்திருந்தார். தற்போது பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications