தபால் ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு
சென்னை:
தபால் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதம் எனமத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டனம்தெரிவித்துள்ளன.
ஏ.ஐ.டி.யூ.சி, ஏ.ஐ.சி.சி.டி.யூ, சி.ஐ.டி.யூ, பி.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, எல்.பி.எப்ஆகிய தொழிற்சங்கங்கள் அடங்கிய தபால் ஊழியர் ஆதரவுக் குழு இதுகுறித்துவெளியிட்ட அறிக்கை:
வேலைநிறுத்தம் செய்யப் போவதாக 14 நாட்களுக்கு முன்பே தபால் துறை ஊழியர்கள்நோட்டீஸ் கொடுத்து விட்டனர். தொழிற்சாலை சட்டப்படி அவர்கள்செயல்பட்டுள்ளனர்.
தொழிற்சாலை கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே,ஊழியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்க முடியாது என்று மத்திய அமைச்சர்கள்சிலர் அறிவிப்பு வெளியிட்டனர்.
வேலைநிறுத்தம் தொடங்கி 10 நாட்கள் கழித்து அதை சட்டவிரோதம் என்று அரசுசொல்வது கேலிக்குரியது. அவசர கால பணிச் சட்டத்தை பிரயோகிக்கப் போவதாகவும்அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த மிரட்டலுக்கு தொழிலாளர்கள் பயப்படமாட்டார்கள்.
சட்டவிரோதம் என்று அறிவித்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு, தபால் துறைஊழியர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பிரதமர் தலையிட்டுஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.
ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே டிசம்பர்18-ம் தேதி ஒரு நாள் முழுவதும் தர்ணா நடத்தப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications