மிசா. பாண்டியனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
கொலை வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமதுரை துணை மேயர் மிசா.பாண்டியனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரையில் அக்டோபர் 18-ம் தேதி பைனான்சியர் முருகேசன் என்பவர் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் மிசா. பாண்டியனுக்கும் தொடர்பா இருப்பதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்த நிலையில் தான் கைது செய்யப்பட்டால், ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், மிசா பாண்டியன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.தற்போது அவரது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வந்தபோது, மிசா பாண்டியன்சார்பில் ஆஜரான வக்கீல், துணைக் குற்றவாளியின் வாக்குமூலத்தை சாட்சியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முருகேசன் கொலை வழக்கில், வரிச்சியூர் செல்வம் என்பவர் துணைக் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார். இவரது கூற்றை ஏற்று, மனுதாரரைக் கைது செய்வதற்கு எந்தவிதமானமுகாந்திரமும் இல்லை என்றார்.
அரசுத் தரப்பு வக்கீல் வாதிடுகையில், கொலைச் சம்பவத்திற்கு முன்பும், நடந்த பின்பும்,மனுதாரரின் அலுவலகத்திற்குச் சென்று அவரை, குற்றவாள பார்த்துள்ளார். குற்றவாளிசரண் அடையும் வரை, மனுதாதரர் தனது அலுவலகத்திற்குச் செல்லவில்லை. குற்றவாளி,மனுதாரருடன் போனில் பேசியதை போலீஸார் பதிவு செய்துள்ளனர். எனவே மிசாபாண்டியன் தவறு செய்தது நிரூபனமாகிறது என்றார்.
இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட பிறகு மிசா பாண்டியனின் முன் ஜாமீன் மனுவைநிராகரிப்பதாக நீதிபதி டி.முருகேசன் உத்தரவிட்டார்.
பைனான்சியர் முருகேசனைக் கொலை செய்ய துணை மேயர் மிசா பாண்டியன்தான்உத்தரவிட்டார் என்று சரண் அடைந்துள்ள வரிச்சியூர் செல்வம் போலீஸில் வாக்குமூலம்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications