குரங்கு கடித்து குழந்தை சாவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ஒரு வயதான பெண் குழந்தை குரங்கு கடித்து இறந்தது.
சீர்காழிக்கு அருகே இருக்கும் மாத்தூரி வெல்லூர் என்ற ஊரில், இந்த சம்பவம் நடந்தது.
அரிசி மில் ஒன்றில் வேலை பார்த்து வரும் தொழிலாளி ஒருவரின் மனைவி தனதுகுழந்தையை வீட்டின் வராந்தாவில் விளையாட விட்டு, உள்ளே வேலையில்ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த குரங்கு ஒன்று குழந்தையை கடித்தது.
வலி தாங்காமல் குழந்தை அழ ஆரம்பித்தது. இதைக் கேட்டு அங்கு வந்த குழந்தையின்தாய் குரங்கை விரட்டினார்.
குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்குழந்தை இறந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications