புதுவை அரசியல் மாற்றம் தமிழகத்தில் எதிரொலிக்கும்
ஈரோடு:
புதுவை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம், தமிழக அரசியலிலும் எதிரொலிக்கும் என இல.கணேசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் தமிழக பா.ஜ.,வின் செயற்குழுக் கூட்டம் மற்றும் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்ட முடிவிற்கு பின்னர் நிருபர்களுக்குபொதுச் செயலர் இல. கணேசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதுவையில் தி.மு.க., பா.ம.க.,பா.ஜ., கண்ணன் ஆகியோர் ஓரணியில் உள்ளனர். இவர்களில் , தி.மு.க., பா.ம.க, கண்ணன் ஆகியோரிடையே யார்தலைமையில் ஆட்சி அமைப்பது என்பதில் தான் போட்டி நிலவுகிறது. புதுவை அரசியலுக்கும் தமிழக அரசியலுக்கும் பெரியதாக ஒன்றும் வித்தியாசம்இல்லை.
இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை தி.மு.க தமையில் ஆட்சி அமைப்படைத் தான் பா.ஜ விரும்புகிறது. புதுவை பேரவையில் பா.ஜ.,வுக்கு பிரதிநிதித்துவம்இல்லை. அடுத்த தேர்தலில் நிச்சயம் இந்த பிரதிநிதித்துவம் உருவாகும். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை புதுவையில் ஆட்சி அமைக்க பெரும்பங்கு வகிக்கக் கூடிய கட்சியாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க தலைமையில், உள்ள கூட்டணிக் கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை சர்க்கஸ் மாஸ்டர் போல முதல்வர் கருணாநிதிசெயல்பட்டு பிரச்னைகளை களைய வேண்டும்.
மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.,ஆட்சியும்., மாநிலத்தில் கருணாநிதி தலைமையிலான ஆட்சியும் அமைய வேண்டும் என்பது தான் எங்களதுவிருப்பம். இதை ஆதரிக்கும் எந்தக் கட்சிக்கும் கூட்டணியில் இடம் உண்டு. தமிழக சட்டசபையில் ஒற்றை இலக்க இடம் உள்ள பா.ஜ.,அடுத்து வரும்தேர்தலில் இரட்டை இலக்க இடங்களைப் பிடிக்கும்.
பா.ஜ.,விற்கு 60 தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.,தலைமையிலான தனிக் கட்சி ஆட்சி உருவாக வேண்டும். எங்களுக்குவாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டுமே இட ஒதுக்கீடு கேட்போம். வேறு தொகுதிகளைக் கொடுத்தால் ஏற்க மாட்டோம்.
நெடுமாறன் தலைமையிலான தமிழ் தேசிய இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத ஆதரவு அமைப்புகள் தடை செய்ய வேண்டும்.
பிரிவினைவாத சக்திகளை எப்போதும் மக்கள் ஏற்க மாட்டார்கள். ராஜ்குமாரை மீட்டு விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக பிரிவினைவாதத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார் நெடுமாறன். பிரிவினைவாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications