ஊட்டியில் கொட்டுகிறது பனி மழை
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடுங்குளிருடன் உறைபனி மழை பெய்து வருகிறது.
மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டிக்கு சீசனை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வருகைதருவார்கள்.
குளிர்கால சீசனை அனுபவிப்பதற்காக செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.
கொட்டும் உறைபனி:
ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஊட்டியில் கடுங்குளிர் நிலவுகிறது. மேலும் உறைபனி கொட்டுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைகடும் வெயில் அடிக்கிறது. ஆனால் மாலை 6 மணி முதல் லேசான பனி பெய்ய ஆரம்பிக்கிறது.
பனிமழையில் கை, கால்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் இரவு 8 மணிக்கு மேல் கடைக்காரர்கள் கடைகளைப் பூட்டி விடுகிறார்கள்.பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
காலையில் 6 மணிக்கெல்லாம் உறைபனி ரோடு, புல்வெளி, வீட்டுக் கூரைகள் மேல் படர்ந்து கிடக்கின்றன. கடுங்குளிருடன் உறைபனி கொட்டுவதால்வாகனங்களிலும், டீசல் டாங்குகளிலும் உள்ள டீசல் உறைந்து பனிக்கட்டி போல் காட்சியளிக்கிறது.
மேலும், கடுமையான உறைபனி பெய்து வருவதால் தேயிலைகள், நாற்றுக்கள் மற்றும் முட்டைக்கோஸ் செடிகள் கருகி விடுகின்றன. தேயிலை விலைவீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications