சூடு பிடிக்கிறது நிலக்கரி ஊழல் வழக்கு
சென்னை:
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்து காணப்பட்டதால் அதற்கு ரூ 15 கோடி சுங்க வரிவிதித்தேன் என்று 2 வது தனிநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சி கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 10 பேர் மீது நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதிபதி தார்வேஸ்முன்னிலையில் 2 வது தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்களை ஒரு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று தார்வேஸ் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து,நீதிபதி தார்வேஸ் உத்தரவில் தவறேதுமில்லை எனத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து நிலக்கரி ஊழல் வழக்கில் சாட்சிகள் விசாரணை தனிநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்தது. ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி கோவிந்தராஜன்என்பவர் சாட்சியம் அளித்தார்.
அவர் தனது சாட்சியத்தில், கடந்த 93 ம் வருடம் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து தமிழக மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதிசெய்யப்பட்டது. அப்போது இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தரம் இல்லாததாக இருந்தால் அதற்கு விதிக்கப்படும் தீர்வையில் சலுகை விதிக்கலாம்என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைந்து காணப்பட்டதால் அதற்கு வழக்கமாக விதிக்கும் தீர்வையை விதித்தேன். அதன்படிரூ 15 கோடி வரி விதித்தேன் என்று சாட்சியம் அளித்தார். இவரது சாட்சியத்துக்கு செவ்வாய்க்கிழமை குறுக்கு விசாரணை நடக்கிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications