அதல பாதாளத்தில் தமிழக காங்கிரஸ்
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 29 லட்சத்திற்கும் குறைவாகவே உறுப்பினர்கள் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுத்தலைவர் ராம் நிவாஸ் மிர்தா கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புத் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக சென்னை வந்த ராம் நிவாஸ் மிர்தா நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் தேர்தலை டெல்லியில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் மற்றும்அதை வாபஸ் பெறுதல் ஆகியவை ஜனவரி 6 ம் தேதி டெல்லியில் நடக்கும். ஜனவரி 7 ம் தேதி தேர்தல் நடக்கும்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தேர்வு மற்றும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு ஆகியவை ஒரு வாரத்தில் முடிவுசெய்யப்படும்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் மிகவும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இது கட்சியின் கண்டிப்பான கொள்கையால்தான் என்றுகூறலாம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 29 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சியில் பங்குகொடுத்தால்தான் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று அதிமுகவிடம் வலியுறுத்துவோமா என்பதை இப்போதே கூற முடியாது.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர்ராஜினாமா செய்ய வேண்டும்.
நாங்கள் கூட்டணி வைக்கத் தீர்மானித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பல வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டதை இத்துடன் முடிச்சுப் போடமுடியாது. ஆனால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும்சீர்குலைக்கும் விதத்தில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள்.
தமிழகத்தில் அதிமுக வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளும் பட்சத்தில் தொகுதிப் பங்கீட்டில் எத்தனை இடங்களைக் கேட்கும் என்றுஇப்போதே கூற முடியாது.
காங்கிரஸ் கட்சி பரந்து விரிந்த கட்சியாகும். இதில் உள்ள உறுப்பினர்கள், பிற தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரத்துடன் தெளிவாகச்சொல்லலாம்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலுவுடன் கட்சி நிலவரம் குறித்துப் பேசினேன் என்றார் மிர்தா.
ஊழல் குற்றச்சாட்டுக்களில் தண்டனை அடைந்துள்ள ஜெயலலிதாவை, தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதைதவிர்க்குமாறு காங்கிரஸ் கோருமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மிர்தா மறுத்து விட்டார்.
யு.என்.ஐ.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications