தி.மு.க பெண் எம்.எல்.ஏ மீது வழக்கு
சென்னை:
தாராபுரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சரஸ்வதி ஆதி திராவிடர் என்று கூறி தேர்தலில் போட்டியிட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தாராபுரத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தாராபுரம் சட்டசபைத் தொகுதி தனித்தொகுதி. இதில் ஆதிராவிடர் இனத்தவர் மட்டுமே போட்டியிட முடியும். இந்த தொகுதியில் தி.மு.க சார்பில் சரஸ்வதிபோட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு ஆவணங்களை ஆராயும் பொழுது அவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று தெரிகிறது.
நெஞ்சம்பாளையம் தொடக்க கூட்டுறவு விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக இருந்திருக்கிறார். இங்கு கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்த்ததில்,இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றே தெரிகிறது.
ஆனால் இவர் சரசு என்ற பெயரில் பெண்கள் பள்ளியில் ஆதிதிராவிடர் என்று சான்றிதழ் வாங்கியுள்ளார். தாசில்தாரையும் வற்புறுத்தியுள்ளார். போலிஆவணங்கள் மூலம் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே இது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்மனோகரன் கூறியுள்ளார்.
நீதிபதி அக்பர் பாஷா காதிரி இந்த மனுவை விசாரித்து இரண்டு வாரத்தில் பதில் தருமாறு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உத்திரவிட்டார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications