கழிவுப் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரிக்கை
கோவை:
கழிவுப் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என கழிவுப் பஞ்சு நூற்பாலை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கழிவுப் பஞ்சு நூற்பாலை சங்கத்தின் பொதுச் செயலர் ரமேஷ்குமார் திப்ரிவால் கூறியதாவது:
கழிவுப் பஞ்சு நூற்பாலைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களில் கழிவுப் பஞ்சின் விலை ரூ. 30 லிருந்து ரூ. 42 ஆக உயர்ந்துள்ளது. இந்தகடும் விலை உயர்வினால் கழிவுப் பஞ்சாலை நலிவடைந்து வருகிறது. தமிழகத்தில் 208 கழிவுப் பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளால் 80ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
வெளிநாட்டில் கழிவுப் பஞ்சின் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், இதற்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் விலை உயர்ந்துள்ளது.எப்போதும் நல்ல பஞ்சிற்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் போது கழிவுப் பஞ்சிற்கும் சேர்த்தே வரி குறைப்பு இருக்கும்.
ஆனால், இந்த வரிக் குறைப்பு தற்போது இல்லை. எனவே, இறக்குமதி வரியும் அதிகமாக உள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கழிவுப் பஞ்சுஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த கழிவுப் பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும். இறக்குமதி வரி 35 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications