தியாகிகளை மறந்து விட்டது காங் .. ஆர்.எம்.வீ.
சென்னை:
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை காங்கிரஸார் மறந்து விட்டனர் என்று ஆர்.எம்.வீரப்பன் பேசினார். தமிழகசவரத் தொழிலாளர் மருத்துவர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் மறைந்த தியாகி எஸ்.எஸ்.விசுவநாததாஸ் படத்திறப்பு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் கழக நிறுவனத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்குகால்கோல் இட்டவர்கள் சவரத் தொழிலாளர்கள்.
சென்னையில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் போதே உயிரை விட்ட விசுவநாத தாஸின் திருவுருப்படத்தைஒவ்வொரு முடி திருத்துவோரும் தனது கடையில் வைக்கவேண்டும். அதுவே அவருக்கு நாம் செலுத்தும்மரியாதையாகும்.
நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் பலர் அறியப்படாமலேயே உள்ளனர். விசுவநாததாஸ்போன்றவர்களை காங்கிரஸ் காரர்களே மறந்து விட்டனர் என்றார் வீரப்பன்.
விழாவில் பேசிய சமூகநலத்துறை அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் கூறுகையில் சுதந்திரம் அடைந்து ஐம்பதுஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் முன்னேற்றப் பாதையில் நாடு பாதியளவு கூட செல்லவில்லை.
இது நாட்டின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது. தியாகி விசுவநாத தாஸ் நாட்டுக்காகச் செய்த தியாகங்களைநாம் மறந்துவிட முடியாது என்றார். விழாவில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைத் தலைவர் எஸ்.கணபதி வாழ்த்துரைவழங்கினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications