கேரள கோவிலில் ரஜினி மனைவிக்குப் பாதபூஜை
சென்னை:
நடிகர் ரஜினி காந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த்திற்கு கேரள மாநிலம் திருவல்லா கோவிலில் பாத பூஜை செய்யப்படவுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே திருவல்லாவில் உள்ளது சக்குளத்துக் காவு என்ற பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் பொங்கலிடுவதுமுக்கிய அம்சமாகும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஒரே சமயத்தில் பொங்கல் வைப்பார்கள்.
இக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை பொதுச் சேவையில் பிரபலமான ஒரு பெண்மணியைத் தேர்வு செய்து முதல் மரியாதை செய்யப்படும். அவர்களுக்குப் பாதபூஜையும் செய்யப்படும். இந்த வருடம் பாத பூஜை நடத்துவதற்கு லதா ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்திலுள்ள அனைத்துக் கேரள தமிழ் பேரவையினர் கலந்து கொண்டு தமிழக பெண்மணியை இந்த தடவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டனர். இதையடுத்து நிர்வாகம் பொதுச் சேவையில் பிரபலமான லதா ரஜினிகாந்தை தேர்ந்தெடுத்தது.
லதா ரஜினிகாந்துக்குப் பாதபூஜையும், முதல் மரியாதையும் நடத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதற்காக லதா ரஜினிகாந்த், அவரதுமகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் சக்குளத்து காவு பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்கிறார்கள்.
லதா ரஜினிகாந்த்துக்குப் பாத பூஜை நடந்ததும் அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வரும் அத்தனைப் பெண்களுக்கும் பாத பூஜை நடக்கும். பாத பூஜைநிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்வாரா என்பது தெரியவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications