அசாருதீனின் அர்ஜூனா விருது பறிபோகிறது
டெல்லி:
மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களிடமிருந்து அவர்களுக்குகொடுக்கப்பட்ட அர்ஜூனா விருதுகளை திரும்பப் பெறுவது என மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
சி.பி.ஐ.யால் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட்வீரர்களை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் சி.பி.ஐ.இயக்குனர் மாதவனை நியமித்தது. அவரும் சி.பி.ஐ. குற்றச்சாட்டுகளை நிரூபணம்செய்தார்.
அதனால் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசாருதீனுக்கும், அஜய் சர்மாவுக்கும்வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடக் கூடாது எனவும், மனோஜ் பிரபாகர்,அஜய் ஜடேஜா ஆகிய இருவரும் 5 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடக்கூடாதுஎனவும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து.
தற்போது மத்திய அரசு கிரிக்கெட் சூதாட்டத்தில் தண்டிக்கப்பட்ட மூன்று கிரிக்கெட்வீரர்களை அவர்களுக்கு அரசால் அளிக்கப்பட்ட அர்ஜூனா விருதை திரும்பஅளிக்குமாறு கேட்க முடிவு செய்துள்ளது.
அசாருதீனுக்கு 1986-ம் ஆண்டும், மனோஜ் பிரபாகருக்கு 1983-ம் ஆண்டும்அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அஜய் ஜடேஜாவின் சேவையை பாராட்டிஅவருக்கு ஜனாதிபதியால் ஆண்டு விழா ஒன்றில் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை ராஜ்யசபாவில் சிவசேனா உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியதாவது:
அசாருதீன். மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா ஆகியோரிடமிருந்து அவர்களுக்குகொடுக்கப்பட்ட அர்ஜூனா விருதை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம் அவர்கள் ஏதாவது கூற விரும்பினால், அவர்களுக்கு 15 நாட்கள் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனாலும் அமைச்சர் எப்போது அவர்களுக்கு இது குறித்து ஆணை அனுப்பப்படும்என தெரிவிக்கவில்லை.
இந்த மூன்று விளையாட்டு வீரர்களும் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.குறிப்பாக ஜடேஜா தன் மீதுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து நீதிமன்ற உதவியைநாடப்போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications