"பாக். அமைதித் தீர்வுக்கு முயன்றால் வரவேற்போம்
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீடித்து வரும் பதட்டத்தைக் குறைக்க, பாகிஸ்தான் கூறும் எந்தத் திட்டத்தையும் வரவேற்கத் தயார் என்று இந்தியாகூறியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் பதட்டம் இருந்துவருகிறது. இதைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது. இதற்காக பாகிஸ்தான் கூறும் எந்தத் திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள இந்தியா தயாராகஇருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் 7 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை சண்டை நிறுத்தம் செய்ய இந்தியா உத்தரவிட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம்தான் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்கின்றது.
இந்தியாவுக்கு தீவிரவாதிகளிடம்ருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை ஒடுக்குவதேமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பாகும். மேலும் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதட்டத்தைத் தணிக்க பாகிஸ்தானின் எந்தத் திட்டத்திற்கும்இந்தியா தயாராக உள்ளது என்றார்.
பாக். கருத்து:
இதற்கிடையே பாகிஸ்தான் கருத்துத் தெரிவிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் போதுமான அளவு தனது ராணுவ வீரர்களை வாபஸ்வாங்கியுள்ளது என்ற அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, ரம்ஜான் மாதத்தையொட்டி அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்தம் ஜனவரி மாதம் 26 ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர்வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் ரம்ஜான் மாதத்தையொட்டி பிரதமர் வாஜ்பாய் சண்டை நிறுத்தம் அறிவித்ததையடுத்து, பாகிஸ்தான் முடிந்த அளவு துப்பாக்கிச்சண்டையில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் என்றும் அறிவித்தது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications