மசூதி கொலை வழக்கில் புதிய திருப்பம்
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மசூதியில் ஹோட்டல் உரிமையாளர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையில் உள்ள மசூதியில் கடந்த 9 ம் தேதி நோன்பு காய்ச்சிக் கொண்டிருந்த அப்துல் ரஷீத் (49) என்பவர் வெடிகுண்டு வீசிக் கொலைசெய்யப்பட்டார்.
இந்து முன்னணியினர் தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று வதந்தி பரவியதால் நெல்லை மாவட்டத்தில் மதக்கலவரம் உருவாகும்அபாயம் தோன்றியது.
இதையடுத்து இரண்டு தனிப்போலீஸ் படையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இவர்கள் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட அப்துல் ரஷீத் தின்மகன் தான் இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நெல்லை எஸ்.பி.கண்ணப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
புளியங்குடியில் ஹோட்டல் நடத்தி வந்தவர் அப்துல் ரஷீத் (49). இவரது மகன் மைதீன். இவர் சில ஆண்டுகள் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார்.அப்போது ஒரு லட்ச ரூபாய் பணம் சம்பாதித்து தன் தந்தைக்குக் கொடுத்தார்.
சமீபத்தில் அவர் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவரைக் காதலித்தது தெரிய வந்தது. இதற்கு மைதீனின்தந்தை அப்துல் ரஷீத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேறு பெண்ணை மைதீனுக்கு நிச்சயம் செய்தார்.
அந்தப் பெண் கொடுத்த வரதட்சணைப் பணம் மற்றும் மைதீன் அனுப்பிய பணம் ஆகியவற்றை வைத்து தனது மகள் பேகத்தின் திருமணத்தை நடத்தினார்.
ஹோட்டல் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டதாலும், தன் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததாலும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறுஏற்பட்டது. அப்துல் தனது மகன் மைதீனை அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த மைதீன் தன் தந்தையைக் கொலை செய்ய புளியங்குடியைச் சேர்ந்த ரவுடிமாரியப்பனை தேர்ந்தெடுத்தார்.
மாரியப்பனின் கூலிப்படையினர், அப்துல் ரஷீத் போகும் இடமெல்லாம் கண்காணித்தனர். ஒரு முறை மாரியப்பன் வைத்த குறியிலிருந்து அப்துல் தப்பித்து விட்டார்.
டிசம்பர் 9 ம் தேதி பாளையங்கோட்டை பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த போது மாரியப்பனின் ஆட்கள் முதலில் புகை குண்டுகளை வீசினர்.பின்னர் அப்துல் ரஷீத்தை மட்டும் குறி வைத்து அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பித்து விட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் நெல்லை மாவட்டமே பதறிக் கொண்டிருக்கையில், மைதீனோ எந்தவித பதட்டமும் இல்லாமல் ஹோட்டலில்அமைதியாக வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததில் அவர்தான் கொலை செய்ய ஏற்பாடு செய்தவர் என்று தெரிய வந்தது.பின்னர் மைதீனும், ரவுடி மாரியப்பனும் கைது செய்யப்பட்டனர் என்றார் எஸ்.பி.
அப்துல் ரஷீத் கொலையில் இந்து முன்னணியினருக்குச் தொடர்பு இருக்கும் என்று கருதப்பட்டதால் முதலில் முதல்வர் கருணாநிதி, அப்துல் குடும்பத்திற்கு ரூ 2லட்சம் நிதி வழங்கினார். இதை நெல்லை மாவட்ட கலெக்டரே நேரில் சென்று கொடுத்தார். மைதீனுக்கு அரசு வேலை கொடுக்கவும் முதல்வர்உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அப்துல் ரஷீத் கொலைக்கு அவரது மகன் மைதீன்தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications