மாறுவேடத்தில் வீரப்பன்?
ஈரோடு:
அதிரடிப்படை வீரர்களின் கண்களிலிருந்து தப்புவதற்காக மொட்டையடித்து, மீசையை எடுத்து விட்டு,மாறுவேடத்தில் வீரப்பன் சுற்றுவதாக கூறப்படுகிறது.
நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட கையோடு, வீரப்பனைப் பிடிக்க தமிழ்நாடு, கர்நாடக அரசுகள் தீவிரமாக இறங்கிவிட்டன. அதிரடிப்படை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
புதிதாக எல்லைப் பாதுகாப்புப் படையும், அதிரடிப்படை வீரர்களுக்குத் துணையாக வந்தது. இதையடுத்து வீரப்பன்கர்நாடக, தமிழக காட்டுப் பகுதியிலிருந்து கேரள காட்டுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் கேரள காட்டுப் பகுதி எல்லையில், ஒரு ஆதிவாசி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்கண்டுபிடிக்கப்பட்டார். இவரை வீரப்பன் குழுவினர்தான் சுட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால்அதிரடிப்படை வீரர்கள்தான் இவரை சுட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வீரப்பன், முறுக்கு மீசையுடன் இல்லாமல், மீசையை சுத்தமாக ஷேவ் செய்து விட்டு,மொட்டைத் தலையுடன், மாறு வேடத்தில் உலவுவதாக அதிரடிப்படை போலீஸார் கருதுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் ஆனைக் கட்டி மலைப் பகுதி வழியாக அவர் கேரளாவுக்குள் தப்பியிருக்கலாம் என்றும்கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதி செக்போஸ்ட்டில் போலீஸால் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மொட்டைத் தலையுடன் யார் வந்தாலும் அவர்களைத் தீவிரமாக பார்த்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் அதிரடிப்படை வீரர்களுக்குத் தேவையான கம்பளிப்போர்வைகள், ஸ்வட்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications