வீரப்பனைப் பிடிப்பது எளிது: கார்த்திக்கேயன்
கோவை:
வீரப்பனைப் பிடிப்பது ஒன்றும் முடியாத காரியம் அல்ல, அதிரடிப்படையின் அணுகுமுறை சரியாக இருந்தால், இம்முறை வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதுஎன முன்னாள் சி.பி. ஐ இயக்குநர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் சி.பி.ஐ.,இயக்குநரும், முன்னாள் மனித உரிமை கமிஷனின் தலைவருமான கார்த்திகேயன் பேசியதாவது;
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது சமுதாயத்தில் குற்றங்களைத் தூண்டி விடுவதற்குச் சமமாகும். எனவே, வீரப்பனுக்கு உரிய தண்டனைகிடைக்க வேண்டும். மகாயுத்தம் என்ற தலைப்பில் ஸ்டார் டி.வி.,யில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் வீரப்பனைப் பிடிக்காமல் விட்டது எந்த மாநிலத்திற்குஏற்பட்ட தோல்வி என ஒரு கேள்வி கேட்டனர். கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு மட்டும் ஏற்பட்ட தோல்வியல்ல. இந்தியாவிற்கேஏற்பட்ட தோல்வி என பதில் கூறினேன்.
வீரப்பனைப் பிடிக்க முடியாமல் போனதற்கு 3 காரணங்களை விளக்கினேன்.
முதலாவதாக அதிரடிப்படையினருக்கு பொதுமக்கள் உதவி கிடைக்காமல் போனது. இரண்டவாது வீரப்பனுக்குப் பாதுகாப்பாக உள்ள காடு, 3மாநிலங்களுக்கும் பொதுவான பரப்பாகும். இதனால் ஏற்பட்ட எல்லை பிரச்னை.
3வது காரணம், அதிரடிப்படையை வழிநடத்திச் செல்லும் அதிகாரிகளின் திறமையின்மை. கடத்தப்படும்போது மட்டுமே இவர்கள், பரபரப்பு சுறுசுறுப்புடன்செயல்படுகின்றனர். பிற நேரங்களைப் பயன்படுத்தத் தவறி விட்டனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தலின்போது ஒவ்வொரு முறையும் ஆதிவாசி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளான். இதனால்,அவனுக்கு அந்த மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இத்தகைய ஆதரவால், போலீசாரின் நடமாட்டம் குறித்த தகவல்கள் எளிதான அவனைச்சென்றடைகிறது.
வீரப்பனைக் காட்டிக் கொடுக்கவோ, போலீசுக்குத் தகவல் சொல்வதாகவோ தெரிய வந்தால் அவர்களை அதே இடத்தில் சுட்டுக் கொலை செய்துவிடுகிறான். இதனால் ஏற்பட்ட பய உணர்வால் மக்கள் யாரும் காட்டிக் கொடுப்பதில்லை.
ஆதிவாசிகள்:
அதிரடிப்படையினரின் கடுமையான அணுகுறை ஆதிவாசி கிராம மக்களின் மனதை மிகவும் பாதிக்கச் செய்துள்ளது. இதனால் முற்றிலுமாகஅதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் போய் விடுகிறது. அதிரடிப்படையினரின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இந்த மாற்றம் இப்போதுஏற்பட்டுள்ளது. ஆதிவாசி கிராம மக்களின் ஒத்துழைப்பை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இப்போது அவர்களுக்கு வெற்றிகிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 97ம் ஆண்டு ஆராய்ச்சியாளர் ஒருவரை அவர்கள் கடத்திச் சென்றபோது, நான் டி.ஜி.பி.,யாகப் பணியாற்றினேன். அப்போதைய பிரதமர் என்னிடம்வீரப்பனைப் பிடிக்க முடியுமா எனக் கேட்டார். முடியாத காரியம் எதுவும் இல்லை, முயற்சியும் சிரமம் அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.
பத்திரிக்கைகள் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படிையினர் மேற்கொள்ளும் தேடுதல் அணுகுமுறைகளைப் பிரசுரிக்கத் தேவையில்லை. இதனால் தேடுதல்வேட்டையில் தொய்வு ஏற்படாலம். வீரப்பனுக்கு தகவல்கள் உடனடியாகக் கிடைக்க இது வாய்ப்பாக அமையும் என்றார் கார்த்திக்கேயன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications