தமிழகத்தில் ஏப்ரலில் தேர்தல் ..தேர்தல் கமிஷனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர்டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியும், மார்ச் மாதம் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம்வகுப்பு பரிட்சையும் நடைபெற உள்ளது. இதையெல்லாம் முறையாகப் பரிசீலனை செய்த பின்னர் எப்போதுதேர்தல் என்பது குறித்து அறிவிக்கப்படும். அநேகமாக ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம்.

தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்த முயற்சி செய்து வருகிறோம். சென்னைசைதாப்பேட்டை தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்து இருப்பதாகப்புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் தேர்தலில்போட்டியிட முடியுமா என்பது குறித்து கருத்து எதுவும் கூற முடியாது.

2 வருடமும், அதற்கு மேலும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இந்தச் சட்டத்தைமேலும் கடுமையாக்க தேர்தல் கமிஷன் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது என்றார் கிருஷ்ணமூர்த்தி.

முன்னதாக, சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக புதிய பொருளாதாரத்திட்டங்கள் பற்றி அதிகம் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் அடித்தளத்தில் உள்ள மக்கள் முன்னேற முடியும்.

தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவருமே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும். பொதுவாகநகர்ப்புறங்களில் உள்ள மக்கள் ஓட்டுப் போட வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி தொலைநோக்குப் பார்வையுடன் நடந்து கொள்ள வேண்டும். தேர்லில்போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக் கணக்கை காட்ட தேர்தல் கமிஷனால் உத்தரவிட முடியாது. அதில்ஏராளமான சிக்கல்கள் உள்ளன.

அதேபோல் வேட்பாளர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது.படித்தவர்கள்தான் நல்லவர்கள். படிக்காதவர்கள் என்று எப்படித் தீர்மானிக்க முடியும்?

பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதில் அரசியல் கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு அரசியல்கட்சியும் தங்களுடைய கட்சி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மட்டுமே தேர்தல் கமிஷன் கட்டளையிடமுடியும் என்றார் கிருஷ்ணமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+