புதுவை: ஆதரவை வாபஸ் பெற்றார் கண்ணன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகசமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கண்ணன்அறிவித்துள்ளார்.
கண்ணன் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மூப்பனாருடன் ஏற்பட்டகருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து விலகி தனித்து செயல்பட்டுவந்தார். இருப்பினும் முதல்வர் சண்முகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவுகொடுத்து வந்தார்.அவரும் அமைச்சராக இருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாருக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்புஇருப்பதாக கண்ணன் புகார் கூறினார். இதையடுத்து சில நாட்களிலேயே, கண்ணனைமுதல்வர் சண்முகம் டிஸ்மிஸ் செய்தார். இதையடுத்து கண்ணன் ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 4 பேரும் ஆதரவை வாபஸ் பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அப்படி நடக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் திடீரென, சனிக்கிழமை தனது ஆதரவை வாபஸ் பெறுவதாககண்ணன் அறிவித்தார். கண்ணன் தவிர அவருடன் மனோகரன், ஏழுமலை, ராஜசேகரஉடையார் ஆகியோர் உள்ளனர்.
மக்கள்விரோத, ஊழல் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கண்ணன்.
கவர்னர் ரஜினிராயிடம் கண்ணன், தனது எம்.எல்.ஏக்கள் புடை சூழ சென்றுதெரிவிக்கவும் முடிவு செய்துள்ளார்.
கண்ணன் ஆதரவு வாபஸ் பெறப்பட்டாலும் கூட புதுவையில் ஆட்சிக்கு எந்தஆபத்தும் கிடையாது. சண்முகம் அரசுக்கு தற்போது 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவுஉள்ளது. மொத்தம் 38 எம்.எல்.ஏக்களைக் கொண்டது புதுவை சட்டமன்றம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications