சண்டை நிறுத்தத்தை அரசு ஏற்க வேண்டும் .. தமிழர் கட்சி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலைமுன்னணி நார்வே தூதுக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும், அமைதி ஏற்படுத்தும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு மாதத்திற்குசண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் அதிபர் சந்திரிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகளின் சண்டை நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள அரசு தயாராக இல்லை. மேலும்சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கும் நேரத்தில் ராணுவ வீரர்கள் வாபஸ் பெறப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இலங்கை அரசு கூறுகையில், புலிகளின் சண்டை நிறுத்தத்தை நார்வே தூதுக்குழுவினர் மூலம் முறையாக அரசுக்குத் தெரிவிக்கவில்லை என்றுகுற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் சம்பந்தன் கூறுகையில், விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்போவதாகஅறிவித்துள்ளனர். இந்த சண்டை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
புலிகள் தானாக அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு வரவேற்க வேண்டும். அதைத் தவிர்த்து விட்டு சண்டை நிறுத்தத்தை நிராகரித்தது தவறு.சண்டை நிறுத்தத்தை நிராகரித்தால் அது எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது.
அதனால் சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு வரவேற்க வேண்டும். சண்டை நிறுத்தத்தை வரவேற்கக் கோரி இலங்கை அரசுக்கு, நார்வே தூதுக்குழுவினர்வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொணடுள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு துணை அமைச்சர் அனுராதா ரத்வதே கூறுகையில், நார்வே தூதுக்குழுவின் மூலம் சண்டை நிறுத்த அறிவிப்பை விடுதலைப்புலிகள்வெளியிடவில்லை. இதனால் இந்த அறிவிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இல்லை.
மேலும் புலிகளிடம் ஆயுத பலம் குறைந்து காணப்படும்போது அவர்கள் சண்டை நிறுத்தத்தை அறிவிப்பார்கள். ஆயுதங்கள் வாங்கியபின் அவர்கள் மீண்டும்தாக்குதல்களைத் தொடங்குவார்கள் என்றார் அனுராதா ரத்வதே.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications