ஸ்டாலினின் பயணச் சிறகுகள் ..
சென்னை:
சென்னை மேயர் ஸ்டாலின் எழுதிய பயணச் சிறகுகள் என்ற புத்தகத்தை கல்வி அமைச்சர் அன்பழகன் சனிக்கிழமை வெளியிட்டார்.
தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மையமாக வைத்து மேயர் ஸ்டாலின் பயணச்சிறகுகள் என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் அன்பழகன் நூலை வெளியிட்டார். புத்தகத்தைகவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
மேயர் ஸ்டாலின் அடுத்த தலைமுறையினரைக் காப்பாற்றும் எண்ணத்தோடு செயல்படுகிறார். அவர் எழுதிய நூல் நாமே ஒரு பயணத்தை மேற்கொள்வதுபோலவும், நேரடியாகக் காட்சிகளைக் காண்பது போலவும் அமைந்துள்ளது என்றார் அன்பழகன்
.முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேசுகையில், அமெரிக்காவுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன் கவிஞர் வைரமுத்துஎன்னை வாழ்த்தினார். அப்போது என்னிடம் குறிப்பேடு ஒன்றைக் கொடுத்தார். அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்தவுடன்,சுற்றுப்பயணம் குறித்து பயணக்கட்டுரை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பயணச்சிறகுகள் என்ற இந்தப் புத்தகத்தை எழுத்தாளன் என்ற எண்ணத்திலோ, எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற ஆர்வத்திலோ எழுதவில்லை. நான்பார்த்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதினேன் என்றார் ஸ்டாலின்.
விழாவில், நடிகர் பார்த்திபன், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் சாவி, கவிஞர் எக்ஸ்னோரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications