ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.
மதுரை:
தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி மற்றும் ஆங்கிலம் மூலம் கம்ப்யூட்டர் கல்வி ஆகியவை மிகவும் முக்கியமானது. ஆங்கில வழியில் கல்விகற்றால்தான் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மதுரையில் திங்கள்கிழமைதெரிவித்தார்.
மதுரையில் கணிணி தமிழ் சங்கத்தின் சார்பில், புதிய தமிழ் தளத்தைத் திறந்து வைத்தும், சி.டி. யை வெளியிட்டும் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திராவிட கட்சிகள் கடந்த 33 வருடங்களாக ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மாணவர்கள் வட இந்தியாவில் வேலைகிடைக்காமல் தவிக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. ஏனெனில் வட இந்தியாவில் ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுதமிழகத்திலுள்ளவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் எதுவும் தெரியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி கற்ற மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. கம்ப்யூட்டர் கல்வியையும் அவர்கள் ஆங்கில வழியில் கற்பதால்இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
ஆங்கில அறிவு இல்லாத கிராமப்புற மாணவர்கள், கம்ப்யூட்டர் கல்வி தமிழ் மூலம் கற்பிக்கப்படுவதால் மிகவும் பயன்பெறுவார்கள் என்றார்.
முதல்வர் கருணாநிதியின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் கூறுகையில், இந்தியாவில் கம்ப்யூட்டர் கற்றவர்களுக்கு 22லட்சத்திற்கு மேல் வேலைவாய்ப்புக்கள் உள்ளன. அவற்றில் 70 சதவீத வேலைவாய்ப்புகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளன என்றார்.
யு.என்.ஐ.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications