மதுரையில் விபத்து: 4 ஐயப்ப பக்தர்கள் பலி
மதுரை:
மதுரை அருகே செவ்வாய்க்கிழமை புளியமரத்தின் மீது வேன் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் நான்கு பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் அருகே உள்ள கோவை குளத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் கன்னியப்பன் வயது 40. இவர்தலைமையில் ஐயப்ப பக்தர்கள் 21 பேர் ஒரு வேனில் சபரிமலைக்குச் சென்றனர். சபரிமலை சென்று விட்டுசெவ்வாய்க்கிழமை காலை அவர்கள் அதே வேனில் கரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த வேன் திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி என்ற இடத்திற்கு வந்த பொழுது திடீரென்று நிலை தடுமாறிரோட்டில் தாறுமாறாக ஓடியது. வேன் அருகில் உள்ள புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது. வேனில் இருந்த பத்து பேர்படுகாயமடைந்தனர்.
அவர்களை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயேகோவைகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் மலையாளி வயது 13, ஜெகன்நாதன் வயது 22, மற்றும்வேன் டிரைவர் ஆகியோர் பரிதாபமாகச் இறந்தனர். கோவை குளத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மதுரை அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த தங்கராஜ், முருகானந்தம், மணிகண்டன், சதீஷ் உள்பட ஆறு பேர் மருத்துவமனையில்தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னொரு விபத்து:
அதே திருமங்கலம், டி.புதுப்பட்டியில் இன்னொரு விபத்து நடந்தது. சென்னை அசோக்நகரைச் சேர்ந்த 55 பேர்ஒரே பஸ்ஸில் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை காலை சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்த பஸ் புதுப்பட்டி வந்த பொழுது திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த பதினாறு பேர்படுகாயமடைந்தனர். ஐந்து பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 11 பேர் திருமங்கலம் அரசுமருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications