அனுமதியின்றி குடியேறியவர்களை வெளியேற்ற மலேசியா முடிவு
கோலாலம்பூர்:
பிற நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு அனுமதியின்றி குடியேறியுள்ள 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களை அடுத்த வருடத்திற்குள் அங்கிருந்து வெளியேற்றமலேசிய அரசு தீர்மானித்துள்ளது.
அண்டை நாடுகளிலிருந்து அனுமதியின்றி நுழைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மலேசிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மலேசியாவில் ஆண்டுதோறும் வெளிநாடுகளிலிருந்து குடியேறி அங்கு வேலை தேடி வருகின்றனர். இதனால் அங்கு வாழும் மக்களின் வேலை வாய்ப்புபெரும்பாலும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து குடியேற்றுத்துறை அதிகாரி ஆசிஷ் சே மேட் கூறுகையில், மலேசியாவிலிருந்து இந்த வருடம் மட்டும் 97, 281 பேர் அவர்களது நாடுகளுக்குஅனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 82,000 பேர் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்கள். பிறர் பிலிப்பைன்ஸ், இந்தியா, பாகிஸ்தான், மியான்மர்,தாய்லாந்து, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
இதனால் அனுமதியின்றி மலேசியாவில் குடியேறியுள்ள 1 லட்சம் பேரை அடுத்த ஆண்டு அவர்களது நாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். இதுதவிரஇரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அனுமதியில்லாமல் குடியேறியவர்களைக் கணக்கெடுத்து அவர்களை அவர்களது நாடுகளுக்கு அனுப்பவும்தீர்மானித்துள்ளோம்.
பொதுவாக இந்தோனேசியாவிலிருந்து, மலேசியாவுக்கு அதிகமானோர் குடியேறியுள்ளனர். அவர்கள் குறைந்த அளவு வருமானம் கிடைக்கும் கட்டிடத்தொழில், விவசாயத் தொழில், வீட்டு வேலை, ஹோட்டல் வேலை மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
திங்கள்கிழமை மட்டும் மலேசியாவிலுள்ள ஜோகூர் பஹாரு டவுனிலிருந்து 1,200 க்கும் மேற்பட்டோர் அவர்களது சொந்த நாடானாஇந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
மேலும் பிற நாடுகளிலிருந்து குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு வருபவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் சோதனை நடத்தப்படுகிறதுஎன்றார் அவர்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications