கண்ணன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு
புதுவை:
புதுவையில் கட்சித் தாவல் சட்டப்படி கண்ணன் அணியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது.
புதுவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக கண்ணன் இருந்தார். அவர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் அவர்த.மா.கா.பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ஏழுமலை, ராஜசேகர உடையார், மனோகர் ஆகியோரும்தமிழ் மாநில காங்கிரசிலிருந்து விலகினர்.
த.மா.கா. கட்சியிலிருந்து விலகிய இவர்கள் 3 பேரும் தங்களை மனோகர் குழு என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சட்டசபையின் நடவடிக்கைகளைமீறியதாக அமைச்சர் கண்ணனை, முதல்வர் சண்முகம் டிஸ்மிஸ் செய்தார்.
த.மா.கா.வினர் மனு:
இந்நிலையில் கட்சித் தாவல் சட்டப்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகர் சுப்ரமணியத்திடம் மனு கொடுத்தனர்.
அவர் உடனடியாக இந்த மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர்கள்திங்கள்கிழமை விளக்கம் அளித்தனர். ஆனால் அவர்கள் அளித்த விளக்கம் சரியாக இல்லை என்று காரணம் காட்டி சபாநாயகர் சுப்ரமணியம் அவர்கள் 3பேரின் எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து சபாநாயகர் சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் நிற்க சீட் கொடுத்த கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டு, கட்சியிலிருந்தஇந்த 3 எம்.எல்.ஏ.க்களும் விலகி விட்டனர். அவர்கள் வேறு கட்சியில் சேர்ந்தாலும், தனி குழுவாகப் பிரிந்தாலும் அது கட்சித் தாவல் தடைசட்டத்துக்கு உட்பட்டதாகும். இதனால் எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ராஜசேகர உடையார், ஏழுமலை ஆகியோர் பதவி நீக்கம்செய்யப்படுகிறார்கள்.
இதுகுறித்து கவர்னர் ரஜனி ராய், முதல்வர் சண்முகம், தலைமைச் செயலாளர் ஜோசப் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கண்ணன் மீது இது வரைபுகார் எதுவும் வரவில்லை. அதனால் அவரது பதவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் புதுவை சபாநாயகர் சுப்ரமணியம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications