தடையை மீறி கொடியேற்றினார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி உழவர்கரை தொகுதியில் இரண்டு இடங்களில் போலீஸ் தடையை மீறி டாக்டர் ராமதாஸ் கொடி ஏற்றினார். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் புதுவை உழவர்கரை தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து முப்பது இடங்களில் கொடியேற்றத்திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் செவ்வாய்க்கிழமை காலை பாண்டிச்சேரி வந்தார்.
காலை 10.30 மணியளவில் அவர் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி பல இடங்களில் கொடி ஏற்றி வைத்தார். உழவர்கரை தொகுதியில் உள்ளஅரும்பார்த்தபுரம் பேட், முத்துப்பிள்ளை பாளையம் ஆகிய இடங்களில் கொடி ஏற்ற போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. அங்கு சென்றால் பதட்டம்ஏற்படும் என்று அவர்கள் கூறினார்கள்.
ஆனால் போலீஸார் விதித்த தடையை மீறி டாக்டர் ராமதாஸ் அந்த பகுதிகளுக்கு சென்று கொடி ஏற்றினார். ஏராளமான போலீஸாரும் அவருடன்சென்றனர். இதனால் அந்த கிராமங்களில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் எந்தவித அசம்பாவிதம் நடைபெறவில்லை. போலீஸ் தடையை மீறி சென்றது ஏன் என்பது குறித்து கட்சியின் முக்கிய பிரகரான முன்னாள்நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
அரும்பார்த்த புரம், முத்துப்பிள்ளை பாளையத்தில் எங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. அதனால் தான் அங்கு சென்றோம். எந்தப் பிரச்சனையும்எழவில்லை. டாக்டர் ராமதாஸூக்கு அங்குள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் என்றார் அவர்.
முன்னதாக, போலீஸ் தடையை மீறி ராமதாஸ் கொடியேற்றியது பாண்டிச்சேரி பகுதிகளில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications