நதிகளைத் தூய்மைப்படுத்த ரூ 38 கோடி ஒதுக்கீடு
கோவை:
அகில இந்திய அளவில் நதிகளைத் தூய்மைப் படுத்தும் திட்டத்திற்கு 38 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு செவ்வாய்க்கிழமை கூறினார்.
கோவையில் மத்திய வனத் துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி. ஆர் பாலு நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
நதி நீரைத் தூய்மைப் படுத்த 9 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இந்த நிதி தற்போது செலவிடப்பட்டு வருகிறது. 16 மாநிலங்களில், 122 நதிகளைத்தூய்மைப்படுத்தப்படும். இதற்காக 128 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கழிவு நீர் சுத்தகரிப்பிற்கு 208 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ்கோவை மாநகராட்சியின் சில மண்டலங்களைத் தூய்மைப் படுத்த திட்டமிட்டுள்ளோம்.
நதிநீர் தூய்மைப் படுத்தும் திட்டத்தின் கீழ் சென்னையில் கூவம் நதியும், பக்கிங்காம் கால்வாயும் தூய்மைப்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான துவக்க விழா விரைவில் நடக்கவுள்ளது. இதில் முதல்வர் கருணாநிதிகலந்து கொள்கிறார்.
கோவையில் நொய்யல் நதியைத் தூய்மைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் திட்டம் கேட்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி மாசடைந்துள்ள நொய்யல் நதியை தூய்மைப்படுத்த முடியும்.
காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, கங்கை ஆகிய நதிகளில் தூய்மைப்படுத்தப்படும் பணி துவங்கியுள்ளது. இதேபோன்று சிறு சிறு நதிகளையும் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி, சீரங்கம், மயிலாடுதுறை,திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சிறு நதிகளையும் பார்வையிட்ட பின்னர் தூய்மைப்படுத்துவது குறித்துமுடிவு செய்யப்படும்.
ஊட்டி, கொடைக்கானல் ஏரிகளும் தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு மேற்கொண்டு வரும்பசுமை வளையத் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
ஆந்திராவில் மிருகக்காட்சி சாலையில் விலங்குகளின் தோலை நான் உரிக்கச் சொல்லவில்லை. சொன்னவர்களின்தோலைத்தான் உரிக்க வேண்டும் என்றார் டி.ஆர் பாலு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications