பெரும்பான்மை இருக்கிறது...புதுவை முதல்வர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் தான் பெரும்பான்மையை இழக்கவில்லை என பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது அரசு இன்னும் பெரும்பான்மை பலத்துடன்தான் இருக்கிறது. எனக்கு பெரும்பான்மை இல்லை என கூறும் எதிர் கட்சியினர் ஆளுநரிடம்சட்டசபையைக் கூட்டுமாறு கேட்டு அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்கட்டும்.
எனக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த பின் ஒரு கணம் கூட நான் பதவியில் இருக்க மாட்டேன். டிசம்பர் மாதம் 7-ம் தேதி அவையில்தாக்கப்பட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதே எனக்கு பெரும்பான்மை பலம் இருகிறது என்பதை நிரூபிக்கிறது.
நான் ஒரு தூய்மையான அரசியல்வாதி. பதவியில் நீடிக்க எம்.எல்.ஏ.க்களை விலை பேச மாட்டேன்.
ஒன்றுபட்ட ஜனதாதள உறுப்பினர் ராஜாராம் எனது அரசிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கவில்லை. ஆனால் அவர் த.மா.கா. தலைவர் மூப்பனாரைசந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசினார். அவர் டிசம்பர் மாதம் 7-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அரசைஆதரிப்பதா இல்லையா என்பது அவரது சொந்த விருப்பம்.
மனோகர் அணியின் மூன்று எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம செய்தது சபாநாயகரின் முடிவு. அவர் அரசியல் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுத்துள்ளார்.சபாநாயகரின் உரிமைகளில் நான் தலையிட விரும்பவில்லை என அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications