தாயகம் திரும்புகிறார் "சாம்பியன் ஆனந்த்
டெல்லி:
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் வெள்ளிக்கிழமைஇந்தியா வருகிறார். டெல்லி வரும் அவர் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனைசந்திக்கிறார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பின் விஸ்வநாதன் ஆனந்த்வெள்ளிக்கிழமை மனைவி அருணா, அவருக்கு ஸ்பான்சர் செய்யும் என்.ஐ.ஐ.டி.நிறுவனப் பிரதிநிதிகளுடன் டெல்லி வருகிறார். உலக செஸ் சாம்பியன் பட்டத்தைவென்றுள்ள முதலாவது ஆசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவருக்குடெல்லியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படவுள்ளது.
ஒரு நாள் டெல்லியில் தங்கியிருப்பார். முக்கிய நிகழ்ச்சியாக ஜனாதிபதி கே.ஆர்நாராயணனை சந்திக்கிறார்.
ஆனந்த்தை வாழ்த்த ஏராளமான ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். ரசிகர்களுடன்இந்திய செஸ் பெடரேஷனின் தலைவர் துர்வ் சஹானி, பொதுச் செயலாளர் உமர்கோயா மற்றும் ராஜேந்திர பவார் ஆனந்த்தை ஸ்பான்சர் செய்த என்.ஐ.ஐ.டி.யின்நிர்வாக இயக்குனரும் காத்திருக்கிறார்கள்.
ஜனாதிபதியை சந்தித்த பின் என்.ஐ.ஐ.டி. மற்றும் அனைத்திந்திய செஸ் பெடரேஷன்ஏற்பாடு செய்துள்ள பாராட்டு நிகழ்ச்சியில் ஆனந்த் கலந்து கொள்கிறார்.
ஆனந்த்திற்கு இந்த வெற்றி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாகும். தனதுபிறந்தநாளான டிசம்பர் 11-ம் தேதியை, தற்போதைய சாம்பியன் அலெக்சாண்டர்காலிஃபிமேனை வென்று கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வெற்றி குறித்து ஆனந்த் கூறுகையில், நான் வென்றது கனவு போல் உள்ளது.எனக்கு கிடைத்துள்ள வெற்றியின் பெருமையை அறிவேன்.
காஸ்பரோவும், க்ராம்னிக்கும் போட்டியில் பங்கேற்காததால்தான் நான் வென்றேன்என கூறுவது தவறு. சிலர் போட்டியில் இருந்து விலகினாலும் போட்டியைகடுமையாக்க பல வீரர்கள் இருக்கிறார்கள்.
அனடோலி கார்ப்போவ் முதல் முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம்வென்றபோது அவர் அப்போதைய சாம்பியன் பாபி ஃபிஷருடன் விளையாடவில்லைஎன கூறினர். எல்லோரையும் திருப்தி படுத்துவது என்பது முடியாது என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications