மரணத்திலும் மாறாத அன்பு ...
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 50 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த ஜோடிகள் சாவிலும்பிரியவில்லை. அதாவது கணவன் இறந்த சில மணி நேரங்களில் மனைவியும் இறந்தார்.
பொள்ளாச்சி அருகே ஆத்துப் பொள்ளாச்சி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் வசித்து வந்தவர் சின்னத் தம்பி (79).இவர் 7 கிராமங்களுக்கு மணியகாரராகப் பணியாற்றியவர்.
இவரது மனைவி மாணிக்கம்மாள் (73). இவர்களுக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் முடிந்து விட்டன. இவர்களுக்குஇரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், உடல் நலம் இல்லாமல் இருந்த சின்னத்தம்பி இறந்து போனார். இவருக்கு இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தது. அப்போது மாணிக்கம்மாள் திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார்.
50 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த ஜோடி, சாவிலும் பிரியாமல் ஒருநாளும் பிரியாத நிலையில் மறைந்துபோயினர். இவர்களது மறைவையொட்டி பொதுமக்கள் சோகத்தில் மூழ்கினர்.












Click it and Unblock the Notifications