"செங்கோட்டை தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள்
டெல்லி:
டெல்லி செங்கோட்டை தாக்குதலில் 6 பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருந்ததாக டெல்லிபோலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள செங்கோட்டையில் லஷ்கர் இ தொய்பாஅமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள்உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து டெல்லி போலீசார் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் பாகிஸ்தானைச்சேர்ந்த 6 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள் இந்த அமைப்பு டெல்லியில் மேலும் பலதாக்குதல்கள் நடத்த இருந்தது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்காலிக போலீஸ் கமிஷனர் சர்மா மேலும் கூறியதாவது:
இந்த தாக்குதலை திட்டமிட்ட முக்கிய குற்றவாளியான அசாப் அகமது என்றபாகிஸ்தான் பிரஜை அவரது மனைவி ரேமனாவுடன் கிழக்கு டெல்லியில் இருக்கும்காசிபார் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அசாப் மே மாதம் முதல் டெல்லியில் தங்கியிருக்கிறார். யாரும் சந்தேகம்கொள்ளக்கூடாது என கம்ப்யூட்டர் மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்திய பெண்ஒருவரையும் மணந்து கொண்டார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் ஒரு ஏகே 56 துப்பாக்கி, 4 கைஎறிகுண்டுகள், 2 தொடர் துப்பாக்கித் தோட்டாக்கள், 1 துப்பாக்கி, 1 கத்தி உட்படஏராளமான ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அசாப்பிடம் விசாரணை செய்ததன் மூலம் அபு சமால் என்ற தீவிரவாதிதங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தது
அதனடிப்படையில் போலீசார் தெற்கு டெல்லியில் இருக்கும் ஜாமியா மிலியாஇஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அபு சமாலின் அபார்ட்மென்டைசெவ்வாய் கிழமை அதிகாலை சுற்றி வளைத்தனர்.
அபு சமால் போலீசாரை கண்டதும் சுடத் தொடங்கினார். போலீசாரும் திரும்ப சுட்டனர்.அதில் அவர் கொல்லப்பட்டார். அங்கிருந்து இரண்டு கை எறிகுண்டுகள், 1துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
செங்கோட்டை தாக்குதல் நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல்நடத்தியவர்கள் இந்த தாக்குதலை நடத்த டெல்லியில் பல நாட்கள் தங்கியிருந்துதிட்டமிட்டிருக்கிறார்கள்.
தாக்குதலை நடத்தியவர்கள் செங்கோட்டையில் நடக்கும் ஒளி ஒலி காட்சியை காணச்செல்லவது போல் ஆயுதங்களை ஒளித்து வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். அங்குமின்சாரம் தடை பட்டதும் சமாலும், அசாதும் ராணுவ வீரர்கள் உள்ள பகுதிக்குள்புகுந்தனர். மற்றவர்கள் வெளியே நின்று கொண்டனர்.
தாக்குதலுக்கு பின் அவர்கள் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து சென்றுவிட்டார்கள்.சந்தேகத்ததை தவிர்க்க ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.மூன்று சக்கர வாகனங்களில் தப்பி சென்றனர் என்றார்.
இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் நாலு பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள்ஸ்ரீநகர் தப்பி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. தலைமறறைவாக இருப்பவர்களின்பெயர்கள் அபு சாத், அபு சகர், பிலால், ஹைதர் என தெரிய வந்துள்ளது.
இவர்கள் குறைந்த பட்சம் 7 முறையாவது சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில்செங்கோட்டைக்குள் சென்றுள்ளனர் என சிறப்பு போலீஸ் டெபுடி கமிஷனர் அசோக்சாந்த் தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க உதவுமாறு மற்ற புலனாய்வுஅமைப்புகளை உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்னர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications