அமெரிக்க கடற்படை அதிகாரியைக் காப்பாற்றியது இந்தியா
மும்பை:
அமெரிக்க கப்பலில் குடல்வால் நோய் காரணமாக பரிதவித்த அமெரிக்க கடற்படைஅதிகாரியை, இந்திய கடற்படை அதிகாரிகள் தங்களது கப்பலில் மீட்டு,மருத்துவமனையில் சேர்த்தனர்.
மும்பை கடலில், மேற்கே 100 நாடிகல் மைல்கள் தொலைவில் அமெரிக்க கடற்படைகப்பலிலில் கடும் குடல் வால் நோய் காரணமாக, அமெரிக்க கடற்படை அதிகாரிலெப்டினன்ட் ஜம்ஸ் ஹம்பிரே வலியில் துடித்தார்.
இதுகுறித்து, இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு அமெரிக்க கடற்படை கப்பலிலிருந்து,நோயால் வாடும் ஒருவரை காப்பாற்றுமாறு செவ்வாய்கிழமை காலை தகவல் வந்தது.
தகவல் கிடைத்தவுடன் இந்திய கடற்படை வீரர்கள், சீகிங் ஹெலிகாப்டரில்விரைந்தனர். பகல் 12.25 மணிக்கு அமெரிக்க கடற்படை கப்பலில் இறங்கிஹம்பிரேயை ஏற்றிக் கொண்டு, சிகிச்சைக்காக அவரை மும்பை பிரீச் கான்டிமருத்துவமனையில் சேர்த்தனர்.
சீ கிங் ஹெலிகாப்படர், பல முறை கப்பல்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளைகாப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலில் தத்தளித்த பலமீனவர்களின் உயிரையும் காப்பாற்ற இந்த ஹெலிகாப்டர் பயன்பட்டுள்ளது.
இந்தியா, 1998-ம் ஆண்டு மே மாதம் பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்குப் பின்,சீ கிங் ஹெலிகாப்டருக்குத் தேவையான உதிரி பாகங்களை தருமாறுஅமெரிக்காவிடம், இந்தியா கேட்டபோது, அமெரிக்க மறுத்து விட்டது. இப்போதுஅதே ஹெலிகாப்டர் மூலம் அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர்காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications