தலைமை தாங்க வாங்க ..மூப்பனாருக்கு அழைப்பு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கப்பட வேண்டும் என தேசியவாதகாங்கிரஸ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பீதாம்பரம் வியாழக்கிழமை கூறியுள்ளார்.
இது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
மூப்பனார் தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கப்பட வேண்டும். இதில் மதவாத பாரதீய ஜனதாகட்சி, சந்தர்ப்பவாத காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகள் சேர்த்துக் கொள்ளப்படும்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் தோல்வி அடைந்து விட்டது.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரே மத்தியில் காங்கிரசுக்கு பதிலாகவும், பாரதிய ஜனதா கட்சிக்குபதிலாகவும சிறந்த ஆட்சியை அமைக்க தகுதியானவர்.
தேசிய ஜனநாயக கூட்டணி, விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பிரச்னையை தீர்க்க தவறி விட்டது.அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மக்களை பெருமளவு பாதித்துள்ளது.
உணவுப் பொருட்கள் அதிக அளவில் இருந்தாலும் அவை அதிக விலையில் விற்கப்படுவதால் மக்களால் அதைவாங்க முடியவில்லை. மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் மக்களை மதவாதம் கூறி பிரிக்க பார்க்கிறதுவாஜ்பாய்அரசு.
ராமர் கோவில் கட்டுவது பற்றி வாஜ்பாய் கூறிய கருத்து பொறுப்பற்ற கருத்து. மதச்சார்பின்மையை ஆதரிப்பதாககூறும் தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள பல கூட்டணி கட்சிகளும் இதை எதிர்க்காமல் இருபபதுவருந்ததத்தக்கது என அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications