செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
டெல்லி செங்கோட்டைத் தாக்குதலில் தொடர்புடைய லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதி வியாழக்கிழமை ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் பெயர் அப்துல் ரசாக் என்ற அபு சூபன். வியாழக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள டெஸ்போரா பாட்மலு என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர்பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலில் தீவிரவாதி அப்துல் கொல்லப்பட்டார். அப்பகுதியிலிருந்து அவர் விட்டுச்சென்ற துப்பாக்கி, ஒரு தொலைத்தொடர்பு கருவி ஆகியவைக்கைப்பற்றப்பட்டன.
முன்னதாக, இவர் டெல்லி செங்கோட்டைத் தாக்குதலுக்கு திட்டமிட்டுக் கொடுத்தவர் என்று தெரிய வந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications