முடிவெடுங்கள் .. மூப்பனாருக்கு ப.சிதம்பரம் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பதை கட்சித் தலைவர் மூப்பனார்தாமதமின்றி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை நடந்த த.மா.கா. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இக்கட்டான நிலையில் பிறந்தது நம் கட்சி. இப்போது தமிழகத்தின் முக்கியக் கட்சிகளில் ஒன்று. மக்கள் நம்மைஅங்கீகரித்து, பல பதவிகளை நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கும் ஆசையைப் போல, தமிழ் மாநிலக் காங்கிரசும் ஆட்சியில் அமர வேண்டும்.இப்படி ஆசைப்படுவதில் தவறில்லை. பத்தோடு ஒன்றாக இருக்காமல், அவர்களிடமிருந்து நாம் வித்தியாசப்படவேண்டும்.
தமிழக அரசியல் தலைவர்களிடையே வித்தியாசமான போக்குடையவர் மூப்பனார். இதை யாரும் மறுக்கமுடியாது. மக்களின் மனசாட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்க வேண்டும்.
திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளால் இந்த முறை தேர்தலில் தனித்து வெற்றி பெற முடியாது. இதைதலைவர் மூப்பனாரும் புரிந்துகொண்டுள்ளார். தனது வலிமை, எதிரியின் பலவீனத்தைத் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ளார். எனவே வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவாக அவர்முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வலுவான, நிலையான, திறமையான ஆட்சியை நடத்த த.மா.கா.வால் மட்டுமே முடியும் என்றார்சிதம்பரம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications