திடீர் பணக்காரர்களால் திண்டாடும் மலேசிய அரசு

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

மலேசிய அரசு அறிவித்திருந்த ஒரு திட்டத்தால், திடீர் பணக்காரர்களான ஒரு கிராமத்தினரால், அந்த அரசுக்குப் புது வகையான பிரச்சினைஏற்பட்டுள்ளது.

மலேசியாவிலுள்ள பெல்டா எல்பிஜி கிராமம்தான் இந்தப் புதுவகைப் பிரச்சினையைச் சந்தித்துள்ள கிராமம். இதுகுறித்து இதுகுறித்து குடிநீர்விநியோகத்துறை இயக்குநர் தாஜ்வுல் உரூஸ் தாஜூதீன் கூறுகையில், பெல்டா எல்பிஜி. கிராமத்தில் 504 குடும்பங்கள் உள்ளன. நலத்திட்டம்ஒன்றுக்காக அரசு, நான்கு ஆண்டுகளுக்கு முன் எல்.பி.ஜி.கிராமத்தில் வசித்து வரும் மக்களின் நிலத்தை 790.3 மில்லியன் விலை கொடுத்து வாங்கியது.

திடீரென கோடிக்கணக்கில் பணம் வந்ததால், கிராமத்தில் வசித்து வந்த 504 குடும்பத்தினரும் திடீர் பணக்காரர்களாகி விட்டனர். அவர்களின்வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் வெளிநாட்டுக் கார்கள், ஆடம்பர பொருட்கள் அலங்கரிக்க ஆரம்பித்தன.

பணம் பெருக ஆரம்பித்ததும் கிராமத்தினரின் மனதிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. நடுத்தர வயது மனைவிகளை பலர் விவாகரத்து செய்து விட்டுஇளம்பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

வயல்களில் வேலை செய்து வந்த கிராமத்தினர் அந்த வேலையை விட்டு விட்டு புது வேலையைத் தொடங்கினார்கள். மண் குடிசைகளாக இருந்த அவர்களதுவீடுகள் நீச்சல் குளம், ஆடம்பர அறைகள் என்று மாற்றமடைந்தன.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குளியலறை என்று இருந்த நிலை மாறி 4, 5 குளியலறைகள் என்று மாற்றமடையத் தொடங்கி விட்டன.

ஒட்டு மொத்த கிராம மக்களே பெரும் பணக்காரர்களாக மாறி விட்டதால் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 4வருடங்களாக குடிநீர் தேவை இரட்டிப்பாகியுள்ளது.

இதனால் தற்போது அரசு, அடுத்த ஆண்டு 2 மில்லியன் ரின்ஜிட் பணத்தை குடிநீர் விநியோகத்திற்காகச் செலவிடத் தீர்மானித்துள்ளது. அணையில் நீரைத் தேக்கிவைத்து கிராம மக்களுக்கு விநியோகிக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது என்றனர்.

அமெரிக்க துணை அதிபராக இருந்த லிண்டன். பி. ஜான்சன் இந்த கிராமத்திற்குச் வந்து சென்றதால், , அக் கிராமத்திற்கு அவரது பெயரை சுருக்கிஎல்.பி.ஜி. கிராமம் என பெயரிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+