பிரதமர் தங்கியிருக்கும் பகுதியில் விமானம் பறக்கத் தடை
கோட்டயம்:
கேரளாவில் பிரதமர் வாஜ்பாய் ஓய்வு எடுத்து வரும் குமரகம் ஹோட்டல் உள்ள பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்த ராக்கெட்டுகளும், எதிர்ப்பு பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் வாஜ்பாய், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள தாஜ் ஹோட்டலில் கடந்த 26 ம் தேதி முதல் ஓய்வு எடுத்து வருகிறார்.
அவருடன் வளர்ப்பு மகள் நிமிதா, மருமகன் ரஞ்சன் பட்டாச்சாரியா ஆகியோரும் உள்ளனர். 1 ம் தேதி வரை வாஜ்பாய் குமரகத்தில் ஓய்வுஎடுக்கவுள்ளதால் அவருடன் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த 35 உயர் அதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. வாஜ்பாய் தங்கியிருக்கும் தாஜ் ஹோட்டலைச்சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரள போலீஸார் மற்றும் பிரதமரின் பாதுகாவலர்கள் இரவு பகலாக கண்விழித்துக் காவல் காத்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள்,பத்திரிக்கை நிருபர்கள், போட்டோ கிராபர்கள் யாரும் ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பிரதமரை யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி செங்கோட்டைத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாத இயக்கம் பிரதமர் அலுவலகத்தைத் தகர்க்கத்திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக கேரளாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை முதல் பிரதமர் தங்கியிருக்கும், ஹோட்டலில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறிப் பறக்கும்விமானங்களைச் சுட்டு வீழ்த்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வானில் விமானங்கள் பறக்கிறதா என்பதை அறிய ராடார் கருவிகள்அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம்-கொச்சி இடையேயான விமான பயணிகள் விமானம் வேறு பாதை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே குமரகம் ஹோட்டல் அருகே ஒரு பெண் வக்கீலைப் போலீஸார் கைது செய்தனர். அவர் பெயர் சகீனா. வயது 27. இவர் எர்ணாகுளம்மாவட்டம் அலுவா என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
சகீனா வாஜ்பாய் தங்கியுள்ள ஹோட்டல் வாசலில் நின்று கொண்டு, பிரதமரின் சுற்றுப்பயணத்துக்காக ஏராளமான பணத்தைச் செலவழிப்பது சரிதானா?இவ்வளவு பாதுகாப்பு அவசியமா? என்று கேட்டுத் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிரதமர் வாஜ்பாயைப் பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டு வந்த 56 வயது நபர் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸ்விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த வக்கீல் என்று தெரிய வந்தது. அது உண்மைதானா என்பதைக் கண்டுபிடிக்க பாட்னாவுக்குத் தகவல்அனுப்பப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications