பெண் கர்ப்பம் .. எஸ்.ஐ.மகன் கைது
திருப்பூர்:
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணைக் கர்ப்பமாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மகனைப் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் பாலன். இவரது மகன் சஜேஸ் (24). இவர்கள் திருப்பூரில்உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
திருப்பூர் குமார் நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த பத்ரனின் மகள் திலகவதி (19). திலகவதியும், சஜேஸூம் கடந்த 3 ஆண்டுகளாகத் தீவிரமாகக்காதலித்து வந்தனர்.
சஜேஸ், தனது சகோதரி கல்கத்தாவில் படித்து வருவதாகவும், அவர் வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் திலகவதியிடம் கூறினாராம்.
இந்நிலையில் காதல், வளர்ந்து கர்ப்பத்தில் முடிந்தது. எனவே திலகவதி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சஜேஸ்சிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால்,திலகவதி தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் உன்னை என் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என சஜேஸ் கூறியுள்ளார்.
இதையடுத்து தன்னை ஏமாற்றியதாகக் கூறி சஜேஸ் மீது திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் திலகவதி. இந்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டரின் மகன் சஜேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications