சிறுசேமிப்பு மூலம் ரூ. 1800 கோடி வசூலிக்கத் திட்டம்
கோவை:
சிறு சேமிப்புத் துறை நடப்பு நிதியாண்டில் ரூ. 1800 கோடி வசூலிக்க முடிவுசெய்துள்ளது என தமிழ்நாடு சிறுசேமிப்புத் துறை ஆணையர் ஸ்கந்தன் தெரிவித்தார்.
கோவையில் தமிழ்நாடு அரசு நடத்தும் லாட்டரியில் ஐந்தரை கோடி ரூபாய்க்கானபரிசுச் சீட்டுக் குலுக்கல் நடந்தது. இந்தக் குலுக்கலில் வேலூர் மாவட்டத்தில்வாங்கப்பட்ட லாட்டரி சீட்டிற்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசு விழுந்தது.
குலுக்கல் முடிவிற்குப் பிறகு நிருபர்களிடம் சிறுசேமிப்புத் துறை ஆணையர் ஸ்கந்தன்அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த ஆண்டு சிறுசேமிப்பில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள்விற்பனையானது. இந்த ஆண்டு இது 1800 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுஇலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்த தொகைரூ. 619 கோடியாக உள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் வரை 800 கோடி ரூபாய்க்கு சிறுசேமிப்பு பத்திரங்கள்வழங்கப்பட்டுள்ளன. தபால் துறையில் ஸ்டிரைக்கால் இந்த சிறு சேமிப்பு பத்திரங்கள்விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது அடுத்த மாதம் தெரிய வரும்.
பிற மாநில லாட்டரிகளை விற்க தமிழக அரசு தடை ஏற்படுத்தவில்லை. ஆனால்,முறையாக, முறைப்படி இதனை நடத்த வேண்டும். விற்பனை வரி செலுத்த வேண்டும்என்பது தான் தமிழக அரசு கூறுகிறது.
பரிசு விழுந்த பின்னர் கருவூலத்தின் மூலம் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதுஉண்மைதான். பரிசு சீட்டு விழுந்த பின்னர் அதனைக் கோர 60 நாட்கள் அவகாசம்அளிக்கப்படுகிறது.
பரிசுத் தொகை வழங்க கால தாமதம் ஆனாலும், பரிசு கிடைப்பது நிச்சயம்.
இதுவரை லாட்டரியால் அரசுக்கு 40 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. பரிசுத்தொகை கோரப்படாத டிக்கெட்டின் மதிப்பு ஒரு கோடியாகும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications