காஷ்மீர் பிரச்சனை: பேச்சுவார்த்தை ஆரம்பமாகுமா?
கோட்டயம்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த சண்டைநிறுத்தம் அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர்தீவிரவாதிகள் காட்டும் பதில் நடவடிக்கையைப் பொறுத்து காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முடிவு செய்யும் என்று பிரதமர்வாஜ்பாய் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமரகத்திலிருந்து பிரதமர் வாஜ்பாய் திங்கள்கிழமை டெல்லி திரும்புகிறார். டெல்லி செல்வதற்காககொச்சி சர்வதேச விமானநிலையம் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்சனையால் பல்லாண்டுகளாக உயிர்ப்பலிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தப் பிரச்சனையை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்றுஇந்தியா விரும்புகிறது. இதற்காக ரம்ஜான் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்ந்து அடுத்த ஒருமாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்டை நிறுத்த நீட்டிப்புக்கு பாகிஸ்தானும், காஷ்மீர் தீவிரவாதிகளும் எடுக்கும் நடவடிக்கை மற்றும் அவர்கள் கொடுக்கும் வரவேற்பைப் பொறுத்துகாஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் குறித்து விரைவில் பேசிமுடிவு எடுக்கப்படும் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications