அதிமுக வில் சேருவாரா ராமதாஸ்?
கோவை:
அ.தி.மு.க அணியில் ராமதாஸ் சேருவார் என விவசாயத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பொன்குமார் கூறினார்.
கோவையில் கட்டடத் தொழிலளர் மற்றும் விவசாயத் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்குமார் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்டடத் தொழிலாளர் சங்கத்தில் 8 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது மாநாடு பிப்ரவரி மாதம்,சென்னையில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் தேவகவுடா,மூப்பனார் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க. கூட்ணியில் எங்களதுகட்சி நீடிக்கும்.
கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தை தி.மு.க அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. தேர்தல் வரும் நேரத்தில்ஒரு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி 6 புதிய வாரியங்களை அரசு ஏற்படுதியுள்ளது.
தேர்தல் நேரத்தில் தங்களை தி.மு.க தோற்கடித்து விடும் என்ற எண்ணத்தில் ராமதாஸ் உள்ளார். அவர் விரைவில்அ.தி.மு.க விற்கு வந்து விடுவார். தமிழ்நாட்டில் சாதிச் சங்கங்களின் கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் சிமெண்ட் தொழிற்சாலைகள் இருந்தும், அபரிதமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் மூடப்பட்டிருக்கும் பஞ்சாலைகளைத் திறக்க வேண்டும். தொழிலர்களின் நலனைப் பாதுகாக்க இந்தநடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications