சூடுபிடிக்கிறது அயோத்தி விவகாரம்
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஸ்வ இந்துப் பரிஷத்தின் திட்டத்திற்கு பிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறிய கூடாரம் அமைத்து ராமர் சீதை ஆகியோரின் சிலைகள்வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அயோத்தி விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு கூறப்படும்வரை அயோத்தியில் தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவுபிறப்பித்துள்ளது.
இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர்அசோக் சிங் லால் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
ராமர் கோவில் கட்டும் விஸ்வ இந்து பரிஷத்தின் முயற்சிக்கு பிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி விவகாரத்திற்கு 2வழிகளில் மட்டும்தான் தீர்வு காண முடியும். ஒன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது. மற்றொன்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வரும் வரைக் காத்திருப்பது.
இந்த நிலையில் விஸ்வ இந்து பரிஷத் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறார்கள். கோர்ட் தீர்ப்புவரும் வரைக் காத்திருப்பதே இப்பிரச்சனை தீர வழியாகும். அதை பிற அமைப்புக்கள் மீறினால் அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். அதாவது இந்த விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று தனதுஅறிக்கையில் கூறியுள்ளார் வாஜ்பாய்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications