தர்மபுரி மாவட்டத்தில் நிலநடுக்கம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தபாத்திரங்கள் உருண்டன.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நில நடுக்கம் இருந்தது. இந்த நிலநடுக்கம் , கோவை உட்படகேரளாவின் பல பகுதிகளில் சற்று அதிகமாக இருந்தது. இதே போன்று வியாழக்கிழமை அதிகாலையில் 5 மணிஅளவில் தர்மபுரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு இருந்தது. இதனால், பல இடங்களில் பாத்திரங்கள்உருண்டன. பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்தனர்.
போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இன்ஸ்பெக்டர் வில்வராணி முருகன் கூறுகையில், வியாழக்கிழமை அதிகாலைஒரு வித மின் அதிர்வு போன்று ஏற்பட்டதால் வேகமாக எழுந்து பார்த்தேன். கட்டில், பீரோ சற்று நகர்ந்து இருந்தது.என்ன நடந்ததென்றே புரியவில்லை. பின்னர், நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன் என்றார்.
மார்கழி மாதம், கோலம் போட்டுக் கொண்டிருந்த கிரிஜா எனபவர் கூறுகையில், வீட்டு முற்றத்தில் கோலம்போடுவதற்காக தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென நிலம் ஆடுவது போல் உணர்ந்தேன்,சில விநாடிகளே நீடித்த இந்த நில நடுக்கத்தை நன்றாக உணர முடிந்தது என்றார்.
மிகவும் சில விநாடிகளே நீடித்த இந்த நிலநடுக்கம், தர்மபுரி மாவட்டம், மற்றும் அதனைச் சுற்றியுற்ற பகுதிகளில்இருந்த மக்கள் உணர்ந்துள்ளனர். இது தமிழகத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications