ஜப்பானில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ:

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட இரண்டாவதுநிலநடுக்கமாகும் இது.

இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை. தலைநகர் டோக்கியோவிலிருந்து 200 கிலோமீட்டர்தொலைவிலுள்ள நிகாட்டா பகுதியில் அதிகாலை 2 மணிக்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டதில் பெரும்பாலான வீடுகள் அசைந்தன. இதில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கீழே விழுந்தன.

இருப்பினும் நிகாட்டா பகுதியில் இயங்கி வரும அணு மின் நிலையத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதே போல் கடந்த செவ்வாய்க்கிழமைஅதிகாலை இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போதும் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+