மூளைக் கட்டியை அகற்றி மதுரை டாக்டர்கள் சாதனை
மதுரை:
மூளையில் இருந்த கட்டியை அதிக ரத்த சேதமின்றி அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மதுரை டாக்டர்கள்.
மூளையில் இருந்த கட்டியை நவீன என்டாஸ்கோப்பி முறையில் அதிக ரத்தம் சேதமாகாமல் மூக்கின் வழியாக அறுவை சிகிச்சை செய்து மதுரைஅப்போலோ மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை நரிமேடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சிறையில் வார்டனாக பணி புரிந்து வருகிறார் இவருக்கு சில காலம் முன்பு தலைவலி வந்தது. இதைஅவர் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார்.
இவருக்கு பார்வை குறைவு ஏற்பட்டவுடன் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இவர் மதுரையிலிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அவர் தலையை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரின்மூளைப்பகுதிக்கு அடியில் நாளமில்லா சுரப்பியில் பெரிய கட்டி வளர்ந்து வருவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு என்டாஸ்கோபிக் முறையில் அதிக ரத்த சேதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளையில் இருந்த கட்டிஅகற்றப்பட்டது.
இது பற்றி ராஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அருண்குமார் கூறியதாவது:
இது போன்ற கட்டிகள் 30 வயது முதல் 40 வயதுடையவர்களுக்கு வருகின்றன. இந்த கட்டிகளை அகற்ற மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சைசெய்ய வேண்டும். இதனால் ரத்தம் அதிகமாக சேதமாகும். மேலும் நோயாளி அதிக நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
என்டாஸ்கோப்பி முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சையில் அதிக ரத்தம் சேதமாகாது. நோயாளியும் அதிக நாள் மருத்துவமனையில் இருக்கவேண்டியதிருக்காது .
இந்த அறுவை சிகிச்சை முறையில் மூக்கின் வழியாக 1 மில்லி மீட்டர் விட்டம் உள்ள சிறு குழாயை செருகி, காமிரா வழியாக பார்த்துக் கொண்டேஅறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால் நோயாளிக்கு அதிக வலியின்றியும், குறைந்த நேரத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்தவுடன் ராஜாவுக்கு பார்வை கிடைத்து விட்டது. பொதுவாக நாளமில்லா சுரப்பிகளில் இது போன்ற கட்டிகள் வந்தால் பார்வைகுறையும். முகம், கை கால்களில் பெரிதா வீங்கிவிடும் என கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications